லியோனில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி..!

31 ஆவணி 2024 சனி 16:36 | பார்வைகள் : 8617
லியோன் (Lyon) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று ஓகஸ்ட் 30, வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் லியோன் 9 ஆம் வட்டாரத்தின் Rue Saint-Pierre-de-Vaise வீதியில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் மகிழுந்தில் காத்திருந்த ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதில் 30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துப்பாக்கிச்சன்னங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025