மூன்றாவது நாளில் மூன்றாவது தங்கம்..!

31 ஆவணி 2024 சனி 16:51 | பார்வைகள் : 6624
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரா ஒலிம்பிக் போட்டிகளின் மூன்றாவது நாளில் இன்று சனிக்கிழமை பிரான்ஸ் தனது மூன்றாவது தங்கத்தினை பெற்றுள்ளது.
ஆடவருக்கான Cyclisme sur piste மிதிவண்டி போட்டியில் பிரெஞ்சு பரா ஒலிம்பிக் வீரர் D. Foulon, தங்கம் வென்றார். 4,000 மீற்றர் தூரம் கொண்ட போட்டியில் 4 மணிநேரம் 16 நிமிடங்களில் வெற்றிக்கோட்டை தொட்டு தங்கத்தை வென்றார்.
போட்டியில் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கத்தினை வென்ற இஸ்ரேலச் சேர்ந்த y. Dementyev இந்த தூரத்தை ஒரு நிமிடம் தாமதமாக சென்றடைந்தார்.
பிரான்ஸ் தற்போது மூன்று தங்கம், 5 வெள்ளி 7 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.