Paristamil Navigation Paristamil advert login

நள்ளிரவு 12 மணி முதல் தமிழக டோல்கேட்டுகளில் மாற்றம்

நள்ளிரவு 12 மணி முதல் தமிழக டோல்கேட்டுகளில் மாற்றம்

1 புரட்டாசி 2024 ஞாயிறு 03:51 | பார்வைகள் : 1650


தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வழக்கமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் செப்படம்பர் 1ம் தேதியான இன்று மீண்டும் புதிய கட்டண விகிதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நள்ளிரவு முதல் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது. 5 சதவிதம் முதல் 7 சதவிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கட்டணம் உயர்த்தப்பட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் சிலவற்றின் விவரம்:

விக்கிரவாண்டி

உளுந்தூர்பேட்டை

சமயபுரம்

மதுரை எலியார்பத்தி

ஓமலூர்

ஸ்ரீபெரும்புதூர்

வாலாஜா

இந்த புதிய கட்டண உயர்வால் ஒவ்வொரு வாகன ஓட்டியும் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதலாக செலுத்த ஆரம்பித்து உள்ளனர். பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு கட்டண உயர்வு விவரம் பற்றி தெரியவில்லை. அவர்கள் சுங்கச்சாவடி சென்ற பின்னரே அறிந்து கடும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர். சில வாகன ஓட்டிகள் தங்களது Fastag கணக்கில் போதிய பணம் இருப்பு இல்லாததால் தடுமாறினர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்