ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க ஐரோப்பிய நிறுவனமொன்று வெளியிட்ட ஸ்மார்ட்போன்
1 புரட்டாசி 2024 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 1380
Nokia போன்களைத் தயாரித்த புகழெற்ற ஐரோப்பிய போன் தயாரிப்பு நிறுவனமான HMD, ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்கும் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது.
இதற்காக HMD Global நிறுவனம் Mattel நிறுவனத்துடன் இணைந்து Barbie Phone எனும் flip phone-ஐ தயாரித்து வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்த போனில் ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்கள் இல்லை. வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடக ஆப்களை இங்கே காண முடியாது.
இந்த போனில் ஒரிஜினல் பிளே ஸ்டோர் இல்லை. தொடுதிரைக்கு பதிலாக keypad இருக்கும். செல்ஃபி எடுக்க முன் கமெரா இல்லை.
ஒரே ஒரு எளிய வீடியோ கேம் உள்ளது. மொபைல் இன்டர்நெட்டும் மிகக் குறைந்த வேகத்தில் மட்டுமே வருகிறது.
ஒரு வகையில், இந்த போன் ஆரம்பத்தில் குறைந்தபட்ச அம்சங்களுடன் இருந்த feature போன்களைப் போலவே இருக்கும்.
இந்த போன் ஆகஸ்ட் 28 முதல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கிறது. பிரித்தானியாவில் 99 GBP-க்கும், ஐரோப்பிய நாடுகளில் 129 யூரோக்களுக்கும் கிடைக்கின்றன.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமெரிக்காவிலும் 129 டொலர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.