Paristamil Navigation Paristamil advert login

இரவில் சூரிய ஒளியை விற்கும் திட்டத்தை வெளிப்படுத்திய Start-up நிறுவனம்

இரவில் சூரிய ஒளியை விற்கும் திட்டத்தை வெளிப்படுத்திய Start-up நிறுவனம்

1 புரட்டாசி 2024 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 5392


கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் (Reflect Orbital) நிறுவனம், இரவில் கூட சூரிய  ஒளியை வழங்குவதாகக் கூறியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பென் நோவாக், இது குறித்த தங்கள் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இயற்கையாகவே, சூரிய  ஒளி இருக்கும்போதுதான் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அப்போது மின்சாரத்தின் தேவை குறைவாக இருந்தது.

இப்போது இரவில் மின்சாரம் தேவை அதிகமாக இருக்கும் நிலையிலும், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, இரவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதற்காக சூரிய ஒளியை விற்க முடியும் என்றும் பென் நோவாக் கூறுகிறார்.

இதற்காக 57 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 370 மைல் உயரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றிலும் 33 சதுர அடி மைலார் கண்ணாடிகள் இருக்கும்.

"இந்த கண்ணாடிகளில் விழும் சூரிய ஒளி பூமியில் நியமிக்கப்பட்ட சோலார் பேனல்களில் பிரதிபலிக்கும், இதனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் மின்சாரம் தயாரிக்க முடியும்" என்று நோவாக் கூறினார்.


சமீபத்தில், ஒரு hot air பலூன் மூலம் தங்கள் யோசனையை பரிசோதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்