காசாவில் போலியோ தடுப்பு முகாம்: சுகாதார அதிகாரிகள் பணியில் தீவிரம்

1 புரட்டாசி 2024 ஞாயிறு 07:33 | பார்வைகள் : 6273
காசாவில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காசாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 10 மாத குழந்தை ஒன்றுக்கு போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று காசாவில் பரந்த அளவிலான போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கி இருப்பதாக உதவி பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை, NGOs ஆகியவற்றுடன் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் இணைந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் தொடங்கி இருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகத்தின் பராமரிப்பு இயக்குநர் மெளஸா அபேட் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை உலக சுகாதார அமைச்சகம் வழங்கிய தகவலில், இஸ்ரேல் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ள மூன்று நாள் போலியோ மருத்துவ முகாம் மூலம் காசாவில் உள்ள 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3