காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பிணைக் கைதிகள்

1 புரட்டாசி 2024 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 9070
காசாவில் சுரங்கப்பாதை இருந்து கண்டெடுக்கப்பட்ட 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உயிரிழந்து விட்டதை அவர்களது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
காசாவில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்த சில மணி நேரங்கள் கழித்து, அந்த 6 பிணை கைதிகளும் உயிரிழந்து விட்டத்தை அவர்களது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Carmel Gat, Eden Yerushalmi, Hersh Goldberg-Polin, Alexander Lobanov, Almog Sarusi, மற்றும் Ori Danino ஆகிய 6 பிணைக் கைதிகளின் உடல்களும் இஸ்ரேலுக்கு எடுத்து வரப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் நடத்திய திடீர் ஊடுறுவல் தாக்குதலின் போது பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப கட்ட மதிப்பீட்டில், சனிக்கிழமை தெற்கு காசா பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் இஸ்ரேலிய படைகள் ஹமாஸ் படையினரை அடைவதற்கு சற்று முன்னதாக இந்த பிணைக் கைதிகள் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஹமாஸ் மற்றும் அதன் ஆயுதப் படை பிரிவு எத்தகைய பதிலும் இதுவரை வழங்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன், தற்போது தெரியவந்த செய்தியால் பேரழிவு மற்றும் கோபமடைந்தாக தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1