"கங்குவா" அக்டோபர் ரேஸில் இருந்து விலக சூர்யா காரணமா?
1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 998
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைகளத்தை உருவாக்கி, அதில் பிரபல நடிகர் சூர்யாவை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "கங்குவா" என்பது குறிப்பிடத்தக்கது. பல மாத உழைப்புக்கு பிறகு வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோத உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு "கங்குவா" அக்டோபர் ரேசிலிருந்து விலகுவதாகவும், புதிய ரிலீஸ் தேதியுடன் கங்குவா படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக "கங்குவா" மாறிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகிய "வேட்டையன்" திரைப்படமும் அதே அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் "ஜெய் பீம்" படத்தை இயக்கி வெற்றி கண்ட ஞானவேல் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் பங்கேற்ற ஒரு பேட்டியில் பேசும் பொழுது, நடிகர் சூர்யா அனைவருடனும் நட்பாக பழகும் ஒரு மனிதர், ஆகையால் அவர் ஒரே தேதியில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக வேண்டாம் என்று ஆலோசனை கூறியதால், தற்போது அக்டோபர் 10ம் தேதியிலிருந்து கங்குவா திரைப்படம் விலகி உள்ளதாகவும், விரைவில் அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.