இலங்கையில் பேருந்து பயணக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:54 | பார்வைகள் : 4165
இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டி சங்கங்களுக்கு விலையைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழில்ரீதியான முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்களது பயணக் கட்டணங்களைத் திருத்தியமைக்கும் அளவுக்கு எரிபொருள் விலை குறைக்கப்படவில்லையென அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பேருந்து பயணக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.