Montparnasse நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்.. ஒருவர் கவலைக்கிடம்..!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 15:20 | பார்வைகள் : 6016
Montparnasse நிலையத்தில் (14 ஆம் வட்டாரம்) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று ஓகஸ்ட் 31, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்காவது நடைமேடையில் வைத்து இரவு 10.40 மணிக்கு இரு குழுக்களுக்கிடையே தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதில் ஒருவர் சரமாரியாக கத்திக்குத்து இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், சில நிமிடங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்தவெள்ளத்தில் கிடந்த நபர் 15 ஆம் வட்டாரத்தின் Pompidou மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.