ஐரோப்பிய விமானநிலையங்களில் - இன்று முதல் புதிய சட்டம்!
1 புரட்டாசி 2024 ஞாயிறு 21:00 | பார்வைகள் : 4520
ஐரோப்பிய விமானநிலையங்களூடாக பயணிக்கும் பயணிகளுக்கு புதிய சட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவித்துள்ளது.
தங்களது பயணத்தின் போது திரவப்பொருட்கள் எடுத்துச் செல்பவர்கள் 100 மில்லிலீற்றருக்கு மிகாதவாறு கொண்டுசெல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இருந்த இந்த நடைமுறை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள C3 ஸ்கேனர் எனும் பொருட்களை சோதனையிடும் கருவியில் தொழில்நுட்ப பழுது இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, திரவ பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கருவிகளில் உள்ள தொழில்நுட்ப பழுதுகள் திருத்தப்பட்டதுடன், இன்று செப்டம்பர் 1 ஆம் திகதியுடன் இந்த சட்டம் தளர்த்தப்பட்டு, மீண்டும் 100 மில்லிலீட்டர் திரவ பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரான்சில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வோர் இது தொடர்பில் அறிந்துவைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.