கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நிலநடுக்கம்

2 புரட்டாசி 2024 திங்கள் 10:27 | பார்வைகள் : 5484
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 4.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய இயற்கை வள நிறுவனம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 5.43 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் பதிவானதாக தகவல்கள் வெளியாகவில்லை.
கியூபெக் மாகாணத்தில் அதிகளவில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.