Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  சர்வதேச மாணவர்களுக்கு  விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

கனடாவில்  சர்வதேச மாணவர்களுக்கு  விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

2 புரட்டாசி 2024 திங்கள் 15:43 | பார்வைகள் : 4613


கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்படி வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது மாணவர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்கிறார்கள் மாணவர்கள்.

இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ள நீவா (Neeva Phatarphekar) என்னும் மாணவி, இதுவரை வராம் ஒன்றிற்கு 40 மணி நேXரம் வேலை செய்துவந்தார்.

ஏற்கனவே செலவுகளைக் குறைப்பதற்காக வேறு இரண்டு மாணவிகள் தங்கியிருக்கும் அறை ஒன்றிற்கு மூன்றாவது நபராக தான் சென்று தங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்.

மளிகைப் பொருட்கள் வாங்குவதையும், வெளியே சாப்பிடச் செல்வதையும் தான் குறைத்துவிட்டதாகத் தெரிவிக்கும் நீவா, இப்போது வேலை செய்ய அனுமதிக்கும் நேரத்தை 24 மணி நேரமான குறைக்க அரசு எடுத்திருக்கும் முடிவு, தன்போன்ற மாணவ மாணவியரை மேலும் கடுமையாக பாதிக்கும் என்கிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்