Paristamil Navigation Paristamil advert login

■ முடிவுக்கு வருகிறது €4 யூரோ பயணக்கட்டணம்!

■ முடிவுக்கு வருகிறது €4 யூரோ பயணக்கட்டணம்!

2 புரட்டாசி 2024 திங்கள் 17:28 | பார்வைகள் : 3906


ஒலிம்பிக் போட்டிகளுக்காக மெற்றோ பயணக்கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த கட்டணம் பழைய விலைக்கு திரும்புகிறது.

சென்ற ஜூலை 20 ஆம் திகதி முதல் மெற்றோ சிட்டைகள் €2.15 யூரோக்களில் இருந்து €4 யூரோக்களாக அதிகரித்திருந்தது. இந்த கட்டண உயர்வு மீண்டும் வழமைக்கு திரும்ப உள்ளது. வாராந்த நவிகோ, தினப்பயண சிட்டைகள், 10 பிரதிகள் கொண்ட பயணப்புத்தகம் என அனைத்தின் விலைகளும் பழைய விலைக்கு திரும்புகின்றது.

10 சிட்டைகள் கொண்ட புத்தகம் €32 யூரோக்களில் இருந்து பழைய விலையான €17.35 யூரோக்களுக்கு குறைக்கப்படுகிறது.

இல் து பிரான்சுக்குள் ஒலிம்பிக் காலத்தின் போது மேலதிகமாக 1.2 மில்லியன் பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்