சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் ரச்சின் ரவீந்திரா
3 புரட்டாசி 2024 செவ்வாய் 08:32 | பார்வைகள் : 1097
நியூசிலாந்து அணியின் இளம் இடது கை அதிரடி பேட்ஸ்முன் ரச்சின் ரவீந்திரா. நியூசிலாந்து வாழ் இந்தியரான இவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 சீசனில் ஏலத்தில் எடுத்தது.
தனது 12 மாத சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்தார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருடன் சியர்ஸ் என்பவரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னோட்டமாக hgமேற்கொண்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் போட்டிக்குப் பிறகு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக்கோப்பையில் 10 இன்னிங்சில 578 ரன்கள் குவித்தார். சராசரி 64.22 ஆகும். இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 1.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணிக்காக 10 போட்டிகளில் 222 ரன்கள் அடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.