'தி கோட்' படம் எப்படி இருக்கு?
3 புரட்டாசி 2024 செவ்வாய் 09:19 | பார்வைகள் : 1534
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டதாக தி கோட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இருந்து வெளிவந்துள்ள பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர்கள் வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்டோர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.
இதற்கிடையே தி கோட் படத்துடைய சிறப்பு காட்சிகள் பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதேபோன்று படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறதுதி கோட் படத்தின் பாடல்கள் ஓரளவு விமர்சிக்கப்பட்ட நிலையில் பின்னணி இசை எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் விஜய் ‘யுவன் பின்னிட்டான்யா’ என்று வெங்கட் பிரபுவிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி கோட் படத்துடைய முதல் நாள் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சிகள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.