Paristamil Navigation Paristamil advert login

கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோதலா?

கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோதலா?

3 புரட்டாசி 2024 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 3566


கவின் நடித்த ’பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில், உருவாகி வரும் ‘பிளடி பெக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் தீபாவளி வெளியீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் பட்டியலில் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ படம் இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்ட சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த படமும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் நோக்கி பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.இந்த நிலையில் தான் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்