Paristamil Navigation Paristamil advert login

Sevran : உதைபந்தாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல்..!

Sevran : உதைபந்தாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல்..!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 6026


உதைபந்தாட்ட போட்டி ஒன்றின் முடிவில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று செப்டம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள allée La Pérouse மைதானத்தில் மாலை உதைபந்தாட்ட போட்டி ஒன்று இடம்பெற்றது. அதன் முடிவில் மாலை 7.30 மணி அளவில் தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர் ஒருவர் கத்தி ஒன்றை உருவி எடுத்து பந்துக்காப்பாளரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த பந்துக்காப்பாளர் சுருண்டு விழுந்துள்ளார். தாக்குதலாளி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

காயமடைந்த வீரர் Robert-Ballanger மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலாளி உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்