10 மில்லியன் இழப்பீடுடன் PSG கழகத்தில் இருந்து விலகுகிறார் Joane Gadou..!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 6966
PSG கழகத்தின் இளம் வீரரான Joane Gadou, அணியில் இருந்து விலகி, ஒஸ்ரிய நாட்டின் பிரபலமான ‘ரெட் புல்’ அணிக்காக விளையாட உள்ளார்.
17 வயதுடைய குறித்த வீரர் Red Bull Salzburg அணிக்காக விளையாட உள்ளதாகவும், இதற்காக 10 மில்லியன் யூரோக்கள் இழப்பீடாக PSG கழகத்துக்கு வழங்கவேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு குறித்த கழகம் Joane Gadou இனை தங்களது அணியில் இணைத்துக்கொள்ள உள்ளது.
சிறிய வீரர் ஒருவருக்காக (mineur) PSG கழகம் பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய தொகை இதுவாகும்.