Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் - 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் - 6 பேர் பலி

3 புரட்டாசி 2024 செவ்வாய் 11:46 | பார்வைகள் : 7427


ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாரி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2021யில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய அரசின் பிராந்திய அத்தியாயம் உட்பட பல போராளிக் குழுக்கள் செயலில் உள்ளன.

இந்நிலையில், தலைநகர் கபூரின் தெற்கு புறநகரில் உள்ள Qala-e-Bakhtiar பகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.

அங்கு மர்ம நபர் ஒருவர் தனது உடலில் வெடிகுண்டுகளை தூண்டியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.


இச்சம்பவம் குறித்து காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், "உடலில் வெடிகுண்டு அணிந்திருந்த ஒரு நபர் வெடிக்க செய்தார். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

காயமடைந்தவர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் விசாரணைகள் நடந்து வருகின்றன" என தெரிவித்துள்ளார்.   
 

வர்த்தக‌ விளம்பரங்கள்