Paristamil Navigation Paristamil advert login

 புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி - சுவிட்சர்லாந்து 

 புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி - சுவிட்சர்லாந்து 

3 புரட்டாசி 2024 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 3710


ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளின் வருகையானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு புலம்பெயர்தல் வரி ஒன்றை விதிக்க அரசியல் கட்சி ஒன்று யோசனை முன்வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் The Liberals கட்சித் தலைவரான Thierry Burkart என்பவரே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, திறன்மிகுப் பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவருகிறது, அவர்களால் சுவிஸ் பொருளாதாரத்துக்கும் நன்மை ஏற்படுகிறது.

அதே நேரத்தில், அதிக அளவில் சுவிட்சர்லாந்துக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது, அவர்களால் நாட்டுக்கு செலவும் ஏற்படுகிறது என்கிறார் Burkart.


ஆகவே, அதற்கேற்ப, வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் சுவிஸ் நிறுவனங்கள், அவர்களுக்கு புலம்பெயர்தல் வரி ஒன்றை விதிக்கவேண்டும் என்கிறார் Burkart.

அத்துடன், நம் நாட்டு பிள்ளைகள் மருத்துவத்துறையில் கல்வி கற்பதற்காக நுழைவதற்கு கஷ்டப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறும் அவர், ஆகவே, வெளிநாட்டிலிருந்து 40 சதவிகித மருத்துவர்களை மட்டும் கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்