Paristamil Navigation Paristamil advert login

கேப்டன் பிரபாகரன் கேரக்டரில் விஜயகாந்த்..

கேப்டன் பிரபாகரன் கேரக்டரில் விஜயகாந்த்..

3 புரட்டாசி 2024 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 4440


தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் ’கேப்டன் பிரபாகரன்’ படத்தில் உள்ள கேரக்டரை தான் ’கோட்’ படத்தின் விஜயகாந்த் கேரக்டராக பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். எனவே கேப்டன் பிரபாகரன் படத்தில் உள்ள பிரபாகரன் கேரக்டர் தான் ’கோட்’ திரைப்படத்தில் வர இருப்பதாகவும் குறிப்பாக காவல்துறை உயர் அதிகாரியாக விஜயகாந்த் ஏஐ மூலம் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கேப்டன் விஜயகாந்தை மீண்டும் அதே கேப்டன் பிரபாகரன் கேரக்டரில் பார்க்க இருப்பதை அடுத்து விஜயகாந்த் ரசிகர்களும் ’கோட்’ திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்