Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விடிய விடிய காத்திருக்கும் மக்கள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விடிய விடிய காத்திருக்கும் மக்கள்

3 புரட்டாசி 2024 செவ்வாய் 16:36 | பார்வைகள் : 4588


பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களுக்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில்    காத்திருப்பதை காணமுடிந்தது.

நாடு முழுவதிலும் இருந்து வந்த பெருந்திரளான மக்கள் குடிவரவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக பல வாரங்களாக வரிசையில் காத்து இருக்கின்றனர்.

இவ்வாறு வரிசையில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ஏறக்குறைய ஆயிரம் கடவுச்சீட்டுகளை வழங்குவதோடு, வரிசையில் மீதமுள்ளவர்கள் இரவை அதே இடத்தில் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்