Paristamil Navigation Paristamil advert login

Marcel Petiot : 60 பேரை கொடூரமாக கொன்ற ‘தொடர் கொலைகாரன்!’

Marcel Petiot : 60 பேரை கொடூரமாக கொன்ற ‘தொடர் கொலைகாரன்!’

2 மார்கழி 2021 வியாழன் 11:30 | பார்வைகள் : 22720


‘சீரியல் கில்லர்ஸ்’ என அழைக்கப்படும் தொடர் கொலைகாரர்கள் உலகம் முழுவம் பிரபலம். பிரான்சில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் வசித்த Marcel Petiot அதில் முக்கியமானவன்.

Marcel André Henri Félix Petiot என்பது அவனது முழுப் பெயர், அவன் ஒரு மருத்துவர். ஆனால் அவன் மருத்துவராக பிரபலம் அடையவில்லை. மாறாக தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 60 பேரை கொலை செய்திருக்கின்றான். அதுவே அவனது பெயர் வரலாற்றில் பதிய காரணம்.

ஆனால் இந்த 60 பேர் என்பது தோராயமான கணக்குத்தான். எண்ணிக்கை அதற்கும் மேல் தான்.

Marcel André சிறுவனாக இருக்கும் போதே அவரது தந்தையால் துப்பாக்கி சுட பயிற்சிவிக்கப்பட்டான். 11 அவது வயதி தனது வகுப்பறையில் உள்ள பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தான். துப்பாக்கியை காட்டினால் கிடைக்காத மரியாதை எல்லாம் தானாக கிடைக்கும் என அவன் நம்பினான்.

இளம் வயதில் அவன் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களை தாக்கவும் செய்தான். ஆனால் இச்செயலை தட்டிக்கேட்பாரில்லை.

1916 ஆம் வருடம் முதலாம் உலக்கப்போரின் போது, பதின்ம வயதில் இருக்கும் போது பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்தான்.

இயல்பிலேயே ஆக்ரோஷமான குணம் கொண்டவன், இராணுவத்தில் மிக கொடூரமாக நடந்துகொண்டான். யுத்தம் முடிவடைந்ததும் அவன் மருத்துவம் படிக்க ஆரம்பித்தான். 1921 ஆம் வருடம் டிசம்பரின் அவன் மருத்துவனாக வெளியேறினான். மனநல மருத்துவராக இருந்த அவன், அதன் பின்னர் செய்ததெல்லாம் ஈவிரக்கம் அற்ற செயல்.

அவனது முதலாவது கொலை 1926 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

வயதான பெற்றோரை மருத்துவதற்கான அழைத்து வந்த இளம் பெண் Louise Delaveau இனை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தான்.

அதன் பின்னர் பெரும் பணக்கார பெண்மணி ஒருவரின் 23 வயது பெண் ஒருவரை படுகொலை செய்தான். 1928, 1930, 1932 என தொடர் கொலைகள் அரங்கேறியது.

1940 ஆம் ஆண்டு பிரான்சை ஜெர்மனி வீழ்த்தியபோது, பிரெஞ்சு நபர்களை அடிமாட்டு வேலைக்கு ஜெர்மனிக்கு இழுத்துச் சென்றனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அவர்கள் விட்டுச் சென்றனர்.

இதனால் Marcel André இற்கு நல்ல வருமானம். போலியாக தயாரித்து மனநலம் பாதிக்கப்பட்டதாக சான்றிதழ்கள் வழங்கினான். இதனால் ஒருதடவை கைது செய்யப்பட்டு 2.400 பிராங்குகள் தண்டப்பணம் அறவிடப்பட்டது. ஆனாலும் அப்போது இவனொரு கொலைகாரன் என நம்புவாரில்லை. வழக்கு தொடுப்பாரில்லை.

ஒரு நாள் வந்தது.

1944 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி Marcel André இன் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஒருவர் காவல்நிலையம் சென்றார்.

அருகில் உள்ள ‘டொக்டரின் வீட்டில் இருந்து குசினி வழியாக தொடர்ச்சியாக புகை வந்துகொண்டே உள்ளது. என்ன ஏது என விசாரியுங்கள்’ என புகார் அளித்தார்.

காவல்துறையினர் ‘தீயணைப்பு படையினரை அனுப்பி வைத்தனர்.’

வீட்டுக்கு தீயணைப்பு படையினர் சென்றனர். வீட்டின் குசினிக்குள் இருந்து புகை வரவில்லை. மாறாக வீட்டின் தரை தளத்தில் இருந்து புகை வந்துள்ளது.

அங்கு சென்று பார்த்த அவர்களுக்கு, தலையெல்லாம் விறைத்து, மாரடைப்பே வந்துடும் போல் அதிர்ச்சி காட்சி தயாராக இருந்தது.

(மீதி நாளை)
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்