தங்க அறுவடை ... ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ்!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 6300
பரா ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று (செப்டம்பர் 2 ஆம் திகதி) பிரான்ஸ் ஐந்து தங்கங்களைப் பெற்று, பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிரெஞ்சு வீரர் Léon Marchand இந்த இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றெடுத்தார்.
இந்த இரண்டு பதக்கங்களும் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளுக்காக பெறப்பட்டுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தனிநபர் மெட்லே போட்டிக்காகவும், Breaststroke ஆகிய இரு போட்டிகளிலும், Léon Marchand எனும் வீரர் தங்கப்பதக்கம் வென்றார். மொத்தமாக ஐந்து தங்கம் உட்பட 8 பதக்கங்களை திங்கட்கிழமை பிரான்ஸ் அறுவடை செய்திருந்தது.
இந்த எட்டு தங்கங்களுடன் பிரான்ஸ் 16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களுடன் பிரான்ஸ் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.