Paristamil Navigation Paristamil advert login

காங்., ஆம் ஆத்மி கூட்டணி; ஹரியானாவில் தேர்தல் களம்; பங்கு பிரிக்கும் பேச்சு துவக்கம்!

காங்., ஆம் ஆத்மி கூட்டணி; ஹரியானாவில் தேர்தல் களம்; பங்கு பிரிக்கும் பேச்சு துவக்கம்!

4 புரட்டாசி 2024 புதன் 03:31 | பார்வைகள் : 1350


ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அக்.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டாக போட்டியிட்டு மொத்தமுள்ள 10ல் காங்., 5 தொகுதிகளில் வென்றன.


ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் அதிருப்தி இருந்தது. டில்லியில் கூட்டணி இருந்தும் பா.ஜ., தான் வென்றது. இதனால் இனி மேல் கூட்டணி கிடையாது என்று ஆம் ஆத்மி நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

கூட்டணி முடிவு
இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. அதில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து சொல்லும்படி ஹரியானா மாநில காங்., நிர்வாகிகளிடம் ராகுல் கேட்டார். அவர்களும் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், ஹரியானா தேர்தலுக்கான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தானது என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.தற்போது தொகுதிகளை என்ன அடிப்படையில் பங்கு பிரிப்பது, வெற்றி பெற்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்பது பற்றி பேச்சு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்