Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் Édouard Philippe..!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் Édouard Philippe..!!

4 புரட்டாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7018


வரும் 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் பிரதமர் Édouard Philippe அறிவித்துள்ளார்.

”அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக இருப்பேன்’ என Édouard Philippe நேற்று செப்டம்பர் 3, செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “நான் பிரெஞ்சு மக்களுக்கு சிலவற்றை முன் மொழிய உள்ளேன். நான் முன்மொழிவது மிகப்பெரியதாக இருக்கும். மக்கள் முடிவு செய்வார்கள்’ என நம்பிக்கை வெளியிட்டார்.

இம்மானுவல் மக்ரோனின் முதலாவது ஆட்சியில்  Édouard Philippe பிரதமராக கடமையாற்றியிருந்தார். மிகவும் செல்வாக்கு மிகுந்த பிரதமராக அவர் இருந்தார். அதன் பின்னர் தற்போது அவரது சொந்த நகரமான Le Havre இல் நகரமுதல்வராக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்