Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் பதவிவிலக வேண்டும்.. 200,000 கையெழுத்துக்கள் பதிவு..!!

மக்ரோன் பதவிவிலக வேண்டும்.. 200,000 கையெழுத்துக்கள் பதிவு..!!

4 புரட்டாசி 2024 புதன் 06:17 | பார்வைகள் : 9334


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவிவிலக வேண்டும் என La France insoumise கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளமை அறிந்ததே. இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இணையத்தளமூடாக மனு (pétition) ஒன்று கொண்டுவரப்பட்டு அதில் இதுவரை 200,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. 

பொது தேர்தல் இடம்பெற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பிரதமரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த தாமதமே அரசியல் மட்டத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், macron-destitution. fr எனும் இணையத்தளமூடாக இந்த பதவி விலகலுக்கு ஆதரவான கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல் ஒருசில மணிநேரங்களிலேயே 200,000 கையெழுத்துக்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்