உருகுவே கால்பந்தாட்ட ஜாம்பவான் லூயிஸ் சுவாரஸ் ஓய்வு அறிவிப்பு
4 புரட்டாசி 2024 புதன் 09:03 | பார்வைகள் : 1157
உருகுவேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் (Luis Suarez), சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம், 17 ஆண்டுகள் நீடித்த அவரது மாபெரும் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
சுவாரஸ் தனது ஓய்வு முடிவை செப்டம்பர் 2, 2024 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அவர் உருகுவே அணி சார்பில் விளையாடும் கடைசி போட்டியாக, செப்டம்பர் 6, 2024 அன்று பாரகுவேயுடன் நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ், 142 சர்வதேச போட்டிகளில் விளையாடி 69 கோல்கள் அடித்து, உருகுவே நாட்டின் எல்லாத் காலங்களிலும் சிறந்த கோல் வேட்டைக்காரராக திகழ்ந்தார்.
2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவதாக கலந்துகொண்டார்.
பின்னர் 2010 தென்னாபிரிக்க உலகக் கோப்பை மற்றும் 2011 கோப்பா அமெரிக்கா போன்ற முக்கிய போட்டிகளில் அணியின் முக்கிய உறுப்பினராக விளங்கினார்.
சுவாரஸ், "எனக்கு 37 வயதாகிவிட்டது, மேலும் அடுத்த உலகக் கோப்பையில் கலந்து கொள்ளுவது மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, என்னால் முடிந்த அளவு விளையாடி, முழுமையான உடல் நலத்துடன் ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன்," என்று கூறினார்.
தற்போது, சுவாரஸ் தனது விளையாட்டு வாழ்க்கையை இன்டர் மயாமி சிஎஃப்பில் தொடர்ந்து, கிளப் அளவிலான விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார்.