Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டுக்கு  விமான சேவையை ஆரம்பித்த  சுவிட்சர்லாந்து

இஸ்ரேல் நாட்டுக்கு  விமான சேவையை ஆரம்பித்த  சுவிட்சர்லாந்து

4 புரட்டாசி 2024 புதன் 09:28 | பார்வைகள் : 6589


இஸ்ரேல் நாடு காசா மீது மேற்கொள்ளும் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு விமான சேவையைத் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், நாளை, அதாவது, வியாழக்கிழமை முதல், இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகருக்கு விமான சேவயைத் துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து நீண்ட ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, விமானங்களை இயக்குவது பாதுகாப்பானதுதான் என முடிவு செய்துள்ளதாக சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்