Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

4 புரட்டாசி 2024 புதன் 14:49 | பார்வைகள் : 4723


ஏழாவது சீசன் முடிந்த கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும், கடந்த சீசனில் அவர் எடுத்த முடிவுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அதிலும் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. கமலின் விலகலால் அடுத்த பிக் பாஸ் யார் என்கிற கேள்வி என தொடங்கியது. அதன்படி சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, நயன்தாரா ஆகியோரது பெயர்களும் அடுத்த தொகுப்பாளர் பட்டியலில் இருந்தது. அதில் இறுதியாக ஓகே ஆனது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி இதை சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். 

விஜய் சேதுபதியை வைத்து அண்மையில் பாண்டிச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட்டை நடத்தி முடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடந்த சீசனில் ரூ 120 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். கமலோடு ஒப்பிடுகையில் விஜய் சேதுபதிக்கு கம்மி சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாம். இணையத்தில் உலா வரும் தகவலின் படி விஜய் சேதுபதிக்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு ரூ. 35 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 50 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஷாலின் சோயா, சீரியல் நடிகர் அருண், தயாரிப்பாளர் ரவீந்தர், தொகுப்பாளர் தீபக் உள்பட பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்