ஈஃபிள் கோபுரத்துக்கு திருமணமாகி 14 வருடங்கள்!

24 கார்த்திகை 2021 புதன் 10:30 | பார்வைகள் : 26637
ஈஃபிள் கோபுரத்துக்கு திருமணமாகி தற்போது 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. என்ன தலை சுற்றுகிறதா..? அட. உண்மையை தான் சொல்கின்றோம்.
Paraphilias என ஒரு வகை பழக்கமுடையவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மனிதர்கள் மீது காதல் வருவதற்கு பதிலாக, உயிரற்ற பொருட்கள் மீது காதல் வரும். சிலைகள், கட்டிடங்கள், கோபுரங்கள் மீது இந்த காதல் தோன்றி அதன் மீது ‘பைத்தியமாக’ இருப்பார்கள்.
அப்படி ஒரு பழக்கமுடையவர் தான் அமெரிக்காவின் இராணுவ வீரர் Erika laBrie எனும் பெண்மணி. இவர் அமெரிக்காவின் ‘விமானப்படையில்’ பணி புரிகின்றார்.
இவருக்கு திடீரென ஈஃபிள் கோபுரத்தின் மீது காதல் எழுந்தது. முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரத்துக்கு வருகை வந்த போதே அவருக்கு ஈஃபிளுடன் காதல் மலர்ந்தது.
பின்னர் விடாப்பிடியாக நின்று 2007 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரத்தை திருமணம் செய்துகொண்டார். தற்போது திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றது.
உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் செய்துகொண்டதோடு அவரது பெயரை Erika Eiffel என மாற்றிக்கொண்டார்.
பின்னாநாட்களில் அவர் ஈஃபிள் கோபுரத்தின் மீது காதல் ஏற்பட்ட கதையை புத்தகமாக எழுதினார்.
எத்தனை விசித்திரமானவர்கள் உள்ளனர் இந்த உலகில்..??1!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1