Paristamil Navigation Paristamil advert login

காகமும் மகாராணியின் நெக்கிளேசும்

காகமும் மகாராணியின் நெக்கிளேசும்

4 புரட்டாசி 2024 புதன் 15:33 | பார்வைகள் : 661


ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5 பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

அக் காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும் நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது. காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது.

ஆண் காகம் இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன். அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது.

மறு நாள் நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும் பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி  புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார்.

உடனே நரிக்கு உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன.

மகாராணியாரும் வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக வாழ்ந்தது.

ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால் நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்