Paristamil Navigation Paristamil advert login

சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டவில்லை : இபிஎஸ்

சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டவில்லை : இபிஎஸ்

5 புரட்டாசி 2024 வியாழன் 05:08 | பார்வைகள் : 5608


சமூக நீதி என வாய்கிழிய முழங்கிவிட்டு, அதை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்காதது, கண்டனத்துக்கு உரியது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம்:

பழனிசாமி: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி சுவரிலும், சமையல் அறை பூட்டிலும், சமூக விரோதிகள் மனித மலம் பூசியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இது போன்ற இழி செயல்களை செய்யும் அளவிற்கு, சமூக விரோதிகளுக்கு தைரியம் வருகிறது என்றால், இந்த ஆட்சியில் சட்டத்தின் மீதான பயம், குற்றவாளிகளுக்கு அறவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்த இழிசெயல் சிலரால் அரங்கேற்றப்பட்டது.

அப்போது, அதற்கான உரிய நீதியை, தி.மு.க., அரசு நிலைநாட்டியிருந்தால், எருமப்பட்டி அம்பேத்கர் நகரிலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது.

எங்கு மைக் கிடைத்தாலும், 'சமூக நீதி' என வாய்கிழிய முழங்கிவிட்டு, அதை தன் ஆட்சியில் நிலைநாட்ட, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திராவிடத்தின் அடிப்படை கோட்பாட்டை தன் வெற்று விளம்பரத்திற்காக மட்டும், முதல்வர் உதட்டளவில் பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியது.

அரசு பள்ளி வளாகத்தில், மனித மலம் பூசியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

பன்னீர்செல்வம்: இதுபோன்ற இழி செயல் நடப்பதற்கு காரணம், சமூக விரோதிகள் மீது, மென்மையான போக்கை, தி.மு.க., அரசு கடைப்பிடிப்பதுதான். காவல் துறை மீதான அச்சம் என்பது ஒரு துளி கூட சமூக விரோதிகளுக்கு இல்லை.

இச்செயலில் ஈடுபட்டோரை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்