கமலா ஹாரிசுக்கு ஆதரவை தெரிவிக்கும் ரஷ்ய அதிபர் புடின்!

6 புரட்டாசி 2024 வெள்ளி 04:58 | பார்வைகள் : 6372
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார்.
எனினும், ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.
இதற்கு முன் அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.
இருப்பினும், இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3