பிரெஞ்சு மக்களின் ‘ஆரோக்கியம்’! - சில இரகசியங்கள்!
26 ஐப்பசி 2021 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 21371
பிரெஞ்சு மக்கள் மிகவும் ஆரோக்கியமானவர்கள். பிற ஐரோப்பிய நாட்டவரோடு ஒப்பிடுகையில் பிரெஞ்சு மக்கள் மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்கிறது புள்ளி விபரங்கள்…
ஒரு சராசரி பிரெஞ்சு நபர் வருடம் ஒன்றுக்கு 60 லிட்டர் வைன் உட்கொள்கின்றாராம்…. உலகிலேயே அதிக ‘சீஸ்’ உற்பத்தியாகும் நாடும் பிரான்ஸ் தான். அத்தோடு ‘பியர்’ அருந்துவதிலும் பிரெஞ்சு காரர்கள் கெட்டிக்காரர்கள்.
இப்படியெல்லாம் இருந்தும் இந்த பிரெஞ்சு காரர்கள் ஆரோக்கியமாக எப்படி இருக்கின்றார்கள்..?
பிரான்சில் பத்தில் ஒருவர் தான் உடல் பருமனாக இருக்கின்ரார். இதுவே அருகில் பிரித்தானியாவில் பத்தில் நால்வர் உடல்பருமனாக இருக்கின்றனர்.
எப்படி சாத்தியம்..?
காரணம் மிகவும் ‘சிம்பிள்’
பிரெஞ்சு மக்கள் மிகவும் கொஞ்சமாக சாப்பிடுகின்றனர். மிகவும் அளவாக சாப்பிடுகின்றனர். அத்தோடு உணவு உண்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றனர்.
இரவு உணவை உண்பதற்கு 40 நிமிடங்களில் இருந்து 1 மணிநேரம் வரை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் எதுவும் தங்குவதில்லை.
அத்தோடு ஐரோப்பாவிலேயே இரவில் அதிக மணிநேரம் தூங்குவது பிரெஞ்சு காரர்கள் தானாம். 9 மணிநேரம் நாள் ஒன்றில் தூங்குகின்றனர். அத்தோடு ‘உறங்கிக்கொண்டிருப்பவரை என்ன நடந்தாலும் எழுப்ப கூடாது!” எனும் ஒரு கொள்கையும் இங்கிருந்தே ஆரம்பித்துள்ளது.
அத்தோடு மக்களிடம் ‘ஜிம்’ கலாச்சாரம் உள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் குவிந்திருப்பதை காணலாம்.
இந்த காரணங்கள் தான் பிரெஞ்சு மக்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துள்ளது.