இன்ஸ்டாகிராமுக்கு தடை விதித்த பிரபல நாடு
3 ஆவணி 2024 சனி 11:28 | பார்வைகள் : 7389
மத்திய கிழக்கு நாடான துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி ஆகும்.
துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan