Paristamil Navigation Paristamil advert login

மது -போதை - மருந்து - அதியுச்ச விபத்துக்கள்!

மது -போதை - மருந்து - அதியுச்ச விபத்துக்கள்!

3 ஆவணி 2024 சனி 12:48 | பார்வைகள் : 3172


 

மதுபோதை, போதைப்பொருள், மருந்துகள் போன்றவை 2023 ஆம் ஆண்டு, வீதி விபத்துச் சாவுகளின் பெரும்பங்கை வைத்துள்ளது. இவை வீதிவிபத்துச் சாவுகளின் 31 சதவீதச் சாவுகள் மேற்கண்டவற்றால் நடந்துள்ளது. 

பிரெஞ்சு நெடுஞ்சாலை நிறுவனங்களின் தொண்டு நிறுவனமான ASFA (association des sociétés françaises d'autoroutes) இந்த அறிக்கையினை வழங்கி உள்ளது.

2023 இல் 31 சதவீதச் சாவுகளை அறிவித்துள்ள ASFA, மதுபோதை, போதைப்பொருள், மருந்துகள் போன்றவை 2022 இல் 26 சதவீதமும், 2021 இல் 27.7 சதவீதமுமாக வீதிச்சாவுகள் ணடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 3 வருடத்தை விட 2023 இல் சாவுகள் அதிகரித்துள்ளன.

மதுபோதை, போதைப்பொருள், மருந்துகளினால் ஏற்பட்டுள்ள வீதிவித்துச் சாவுகளில் 43 சதவீதமானவை வார இறுதிகளிலேயே நடந்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்