Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மோகன் ஜியின் புதிய திரைப்படம்..

 மோகன் ஜியின் புதிய திரைப்படம்..

3 ஆவணி 2024 சனி 14:18 | பார்வைகள் : 6489


இன்றைய ஆடிப்பெருக்கு தினத்தில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை நடந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் ’பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து ‘திரெளபதி’ என்ற படத்தையும் அதன்பின் ’ருத்ரதாண்டவம்’ ’பகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘திரெளபதி’ படம் மட்டும் ஓரளவு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று ஆடிப்பெருக்கு தினத்தில் நடந்துள்ளது. இந்த பூஜை குறித்து மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இன்று ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.. எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி..

மேலும் இந்த படத்திலும் ‘திரெளபதி’ மற்றும் ’ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் ரிச்சி தான் ஹீரோ என்பதும் இன்றைய பூஜை புகைப்படங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்