Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவின் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க சந்தை Lille நகரில் இன்று திறக்கப் பட்டது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க சந்தை Lille நகரில் இன்று திறக்கப் பட்டது.

2 புரட்டாசி 2023 சனி 07:50 | பார்வைகள் : 4670


Franceன் 500 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'Broderie de Lille' என்னும் சந்தை இன்று காலை 8:00 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது. இன்றும், நாளையும் (02,03/09) நடைபெறவுள்ள சந்தைக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் 2.5 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

80 கிலோமீட்டர் பரப்பளவில் திறக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சந்தையில் 800 உள்ளூர் கண்காட்சியாளர்கள், கிடைத்தலுக்கு அரிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர், ஏனைய வர்த்தகர்கள், என பல்லாயிரக்கணக்கானோர் கூடவுள்ளனர்.

இன்று காலை (02/09) திறக்கப்பட்ட குறித்த சந்தை நாளை மாலை (03/09) 6 மணிவரை திறந்திருக்கும். 1500 தடுப்பு சுவர்கள், வாகனங்கள் செல்ல தடை, என அந்தப் பகுதி சுமார் 300 காவல்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றும், நாளையும் இந்த சந்தையில் பல அரசியல் பிரமுகர்களும் வருகைதரவுள்ளதாக அறியமுடிகிறது.
இங்கு வருகைதரவுள் பார்வையாளர்கள் மிகவும் விரும்பி உண்ணும் 'Mussels' மட்டி என்னும் கடலுணவு 500 தொன் தயாராக இருப்பதாகவும் தெரியவருகிறது.

2018ம் ஆண்டு குறித்த சந்தை நடைபெற்று முடிந்த பின்னர் சுமார் 361 தொன் குப்பைகள் அகற்றப்பட்டதாக துப்பரவுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்