இல் து பிரான்ஸ் : பொது போக்குவரத்துகளில் பாலியல் துன்புறுத்தல் - குறைந்தஅளவு பதிவு

2 புரட்டாசி 2023 சனி 08:38 | பார்வைகள் : 10842
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் பொது போக்குவரத்துக்களில் இடம்பெறும்பாலியல் சுரண்டல்கள்/துன்புறுத்தல்கள் நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 11.7% சதவீதத்தினால் (2021 ஆம்ஆண்டின் அதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில்) அதிகரித்திருந்த நிலையில்நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அது 3.9% சதவீதத்தினால்வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற ஆண்டில் 13 பேருக்கு சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 9 பேர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில் இல் து பிரான்சுக்குள் மட்டும் 57,000 வழக்குகளை காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பதிவு செய்திருந்தனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 156 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தமாக 86 வழக்குகள் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.