ஓகஸ்ட் விடுமுறை - 1000 கிலோமீற்றர் போக்குவரத்து நெருக்கடி!!

4 ஆவணி 2024 ஞாயிறு 06:45 | பார்வைகள் : 8536
ஓகஸ்ட் மாதம் விடுமுறைக்காகச் செல்வோராலும், விடுறை முடிந்து திரும்புபவர்களாலும், பிரான்சின் நெடுஞ்சாலைகள் வெள்ளிக்கிழமையில் இருந்து பெரும் போக்குவரத்து நெரிசலிற்கு ஆளாகி உள்ளது.
இதன் உச்சமாக நேற்று சனிக்கிழமை பிரான்சின் நெடுஞ்சாலைகளில், மொத்தமாக 1039 கிலோமீற்றர் தூரம் அளவிற்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என, பிரெஞ்சு அரசாங்கத்தின் போக்குவரத்து செய்தியான Bison Futé தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து நெருக்கடி தொடரும் எனவும், இன்றைய போக்குவரத்து சிவப்பு நிலை எச்சரிக்கையில் உள்ளது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.