அயர்லாந்து செல்லும் இலங்கை மகளிர் அணி

4 ஆவணி 2024 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 4744
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
மகளிர் இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை வென்று புதிய வரலாறு படைத்தது.
அதனைத் தொடர்ந்து, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இலங்கை அணி விளையாட உள்ளது.
ஒகஸ்ட் 11ஆம் திகதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் போட்டி தொடர் ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
21 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 20 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.