பயணக்கட்டணங்கள் மீண்டும் பழைய விலைக்கு திரும்பும்..!!

4 ஆவணி 2024 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 11173
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர், பயணக்கட்டணங்கள் பழைய விலைக்கு திரும்பும் என இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைச்சகத்தின் (Île-de-France Mobilités) தலைவர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக மெற்றோ கட்டணங்கள், RER சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் பேருந்து கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. இந்த விலையேற்றம் பரிஸ் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில், பழைய விலைக்கு கட்டணங்கள் திரும்பும் என தெரிவித்துள்ளார்.
போட்டிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் கட்டணங்கள் முன்னர் இருந்த விலைக்கு மீண்டும் திரும்பும் என Valérie Pécresse, நேற்று சனிக்கிழமை இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.