ஒலிம்பிக் கிராமத்தில் இலவச மருத்துவ நிலையம்.. ஆச்சரியத்தில் அமெரிக்க வீராங்கனை!!
4 ஆவணி 2024 ஞாயிறு 11:33 | பார்வைகள் : 16389
Saint-Denis நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் (village olympique) இலவச மருத்துவ முகாம் ஒன்று அமெரிக்க வீராங்கனையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ரக்ஃபி வீராங்கனையான Ariana Ramsey இது தொடர்பில் TikTok சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய காணொளி ஒன்று தற்போது 90,000 பேருக்கும் அதிகப்பேரால் பார்வையிடப்பட்டு வைரல் ஆகியுள்ளது. அதில், ஒலிம்பிக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச மருத்துவ நிலையம் குறித்து ஆச்சரியப்படுவதாகவும், இலவச பற்கள் பராமரிப்பு, இருதய பரிசோதனைகள், இலவச உணவும் வழங்கப்படுகிறது எனவும், அது குறித்து தான் ஆச்சரியப்படுவதாகவும், பிரான்சுக்கு உங்களை வரவேற்கிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவில் மருத்துவ செலவீனங்கள் மிகவும் அதிகமாகும். (*l’Organisation de coopération et de développement économiques வெளியிட்ட தகவல்களின் படி) அங்கு நபர் ஒருவருக்கு €9,700 யூரோக்களுக்கும் அதிகமாக ($10,600 டொலர்கள்) செலவாகிறது. இந்த தொகை ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். அதனடிப்படையிலேயே குறித்த வீராங்கனை இந்த ஆச்சரியத்தை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாட்கள் முன்பாக நடைபெற்று முடிந்த ஏழு பேர் கொண்ட ரக்ஃபி விளையாட்டில், Ariana Ramsey தலைமையில் அமெரிக்கா வெண்கலப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan