Paristamil Navigation Paristamil advert login

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மாயமான நபர்...

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மாயமான நபர்...

2 புரட்டாசி 2023 சனி 08:54 | பார்வைகள் : 8043


சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் நபர்  ஒருவருடைய உடல் மாயமாகி இருந்தது.

இந்நிலையில் 52 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

2022ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம், மலையேற்றத்துக்குச் சென்ற இருவர், Chessjengletscher என்னும் பனிப்பாறையில் மனித உடலின் எச்சங்களைக் கண்டுள்ளார்கள்.

 அந்த உடலை அடையாளம் காண ஓராண்டு ஆன நிலையில், சென்ற மாதம், அதாவது, ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அந்த உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர் ஒருவர் மாயமாகியுள்ளார். 

அப்போது அவரைத் தேடும் முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு, ஒகஸ்ட்  மாதம் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், 52 ஆண்டுகளுக்கு முன் மாயமான அந்த பிரித்தானியருடையது என தற்போது தெரியவந்துள்ளது.

இண்டர்போல் மற்றும் ஸ்கொட்லாந்து பொலிசார் உதவியுடன், மாயமான அந்த பிரித்தானியரின் உறவினர்களின் DNA பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது.

புவி வெப்பமயமாதல் காரணமாக, ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகி வருகின்றது.

இந்நிலையில் 52 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலையேற்ற வீரர்களின் உடல்கள் இப்போது கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்