Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் ஒலிம்பிக்கிக்கின் வெற்றியாளர்கள் ஏன் மணியை அடிக்கின்றார்கள்?

பரிஸ் ஒலிம்பிக்கிக்கின் வெற்றியாளர்கள் ஏன் மணியை அடிக்கின்றார்கள்?

5 ஆவணி 2024 திங்கள் 07:46 | பார்வைகள் : 3009


பரிஸ் ஒலிம்பிக் 2024 இன் வெற்றியாளர்கள், ஸ்தத்-து-பிரான்சில் (Stade de France) அமைக்கப்பட்டுள்ள மணியில் ஏன் ஒலியை எழுப்புகின்றார்கள்?

பரிசின் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்திலிருந்து இந்த நடைமுறை மிகவும் பிரபலமாகி உள்ளது.

இது பிரெஞ்சு வீரர்களால் மட்டுமன்றி சர்வதேச வீரர்கள் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த மணியானது நோர்மோந்தியிலுள்ள  Fonderie Cornille Havard de Villedieu-les-Pôeles-Rouffigny (Manche)  பட்டறையில் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் பட்டறையிலேயே, விபத்திற்குள்ளாகி எரிந்து, மீள் கட்டுமானம் நடக்கும், பரிஸ் நோத்ரதாம் தேவாலயத்திற்கான வேலைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..

ஸ்தத்-து-பிரான்சில் வீரர்களால் ஒலியெழுப்படும் இந்த மணி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவின் பின்னர், நோத்ரதாம் தேவாலயத்தின் முக்கிய தூணில் பொருத்தப்படும்.

இதனாலேயே வெற்றிபெறும் வீரர்கள், இந்த மணியை ஒலிப்பதை கௌரவமாகக் கருதுகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்