Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!  கர்ப்பிணி பெண்ணை  சுட்ட பொலிஸார்

அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!  கர்ப்பிணி பெண்ணை  சுட்ட பொலிஸார்

2 புரட்டாசி 2023 சனி 09:06 | பார்வைகள் : 5326


அமெரிக்காவின் ஓஹியோ வெஸ்டர்வில்லில் (Westerville) உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் கர்ப்பிணி பெண் திருடியதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 தாகியா யங்(Ta'kiya Young) என்ற கர்ப்பிணி பெண்  பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதில், தாகியா யங் நோக்கி பொலிஸார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர். 

அதற்கு, ”தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு பொலிஸாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சிக்கவே காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு பொலிஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில் தாகியா யங் காயமடையே கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது.

உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்-கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக தாகியா யங் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் பொலிஸாரின் இந்த கடுமையான நடவடிக்கையை குற்றச்செயல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் என்று தாகியா யங் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்