பனிமலைச் சரிவு - பலி - தேடுதல் வேட்டை!!
5 ஆவணி 2024 திங்கள் 08:53 | பார்வைகள் : 2194
மொன்புளொ (Mont-Blanc) மலைச் சிகரங்களில் ஒன்றான தக்குள் (Tacul) பகுதியில் , இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தப் பனிச்சரிவு விபத்தில், ஒருவர் கொல்லப்பட, நால்வர் காயமடைந்துள்ளனரர்..
இதில் ஒருவர் உயிராபத்தான நிலையில் உள்ளார். இவர்கள் அனைவரும் அன்சி நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பனிச்சரிவிற்குள் மேலும் யாரும் சிக்கியுள்ளனரா, அல்லது பலியாகியுள்ளனரா, என ஜோந்தார்மினரின் மலைப்பிரிவின் மீட்புப் படை, தேடுதலை ஆரம்பித்துள்ளனர் என, Haute-Savoie மாவட்டத் தலைமைகம் தெரிவித்துள்ளது.