ஹோட்டல் சுவையில் மொறு மொறு தோசை
5 ஆவணி 2024 திங்கள் 11:59 | பார்வைகள் : 615
வேகமாக ஓடும் நமது வாழ்க்கையில் உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்தகைய உணவு மிகவும் ஆரோக்கியமானதாக அமைய வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லையெனில் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். நம்மில் பலர் வீட்டில் சமைக்கும் உணவுகளை விரும்புவதில்லை. அவர்களுக்கு வீட்டிலேயே ஹோட்டல் போன்ற தோசையை சமைப்பது எப்படினு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தேவையானபொருள்கள்
புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்
பச்சரிசி - 200 கிராம்
வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 25 கிராம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விட வேண்டும். அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்க வேண்டும். சட்னி, சாம்பாருடன் ருசித்து சாப்பிடலாம்.